தமிழ்நாடு

"10 மணி நேரம் காத்திருந்தும் ரெம்டெசிவிர் கிடைக்கவில்லை" - காவலர்களுடன் மக்கள் வாக்குவாதம்

"10 மணி நேரம் காத்திருந்தும் ரெம்டெசிவிர் கிடைக்கவில்லை" - காவலர்களுடன் மக்கள் வாக்குவாதம்

sharpana

கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க ஐந்தாவது நாளாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கொரோனா தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்படுகிறது. பல இடங்களில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை திறந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் 5 ஆவது நாளாக இன்றும் ஏராளமானோர் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் குவிந்து ரெம்டெசிவிர் வாங்க பல மணிநேரம் காத்திருக்கிறார்கள்.  

காத்திருந்த சிலர் கூறுகையில், “பலமணிநேரமாக காத்திருக்கிறோம். காத்திருந்தும் இதுவரை டோக்கன் கூட தரவில்லை. ரெம்டெசிவிர் இருக்கிறதா என்று கூட சொல்லவில்லை” என்றனர். 10 மணி நேரம் காத்திருந்தும் மருந்து கிடைக்காதவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.