மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது.
கடந்த வெள்ளியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஆயிரங்கால் மண்டபம் அருகே இருந்த வீரவசந்தராயர் மண்டபம் இடிந்தது. தீ விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளை குளிர்விக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் தீ விபத்தின்போது சேதமடைந்த பகுதிகளை தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். அப்போது தீ விபத்தில் மிகவும் சேதமடைந்திருந்த பசுபதீஸ்வரர் சன்னதி மண்டபத்தின் மேற்கூரை 6 அடி நீளம், 5 அடி அகலத்திற்கு இடிந்து விழுந்தது. மேலும் அப்பகுதியில் நின்ற பெரிய கற்தூண் ஒன்றும் சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் செல்லாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.