தமிழ்நாடு

விடுதியில் தண்ணீரில்லை - பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

விடுதியில் தண்ணீரில்லை - பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

webteam

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை விடுதியில் ஒருவாரகாலமாக தண்ணீர் வரவில்லை எனக்கூறி மருத்துவக்கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவர்கள்  இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏறக்குறைய 300 பேர் தங்கி உள்ள விடுதியில் தண்ணீர் வராததால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையின் துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டம் உறுதியாக சென்றதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக விடுதி மாணவர்களுக்கு தண்ணீர் தர நடவடிக்கை எடுத்தனர். மேலும் விடுதிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டங்களை வாபஸ் பெற்றுக்கொண்டு தங்கள் பணிக்குச் சென்றனர்.