தமிழ்நாடு

விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி

விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி

Rasus

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி விடுதியில், கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த விமல் என்ற மாணவர் பிசியோதெரபி பயின்று வருகிறார். 4 ஆண்டுகள் படிப்பு முடிந்து, தற்போது பயிற்சி மேற்கொண்டுள்ள அவர் விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் சுமார் 20,000 ரூபாயை செலுத்தாமல் இருந்திருக்கிறார். எனவே விடுதியில் தங்கி பயிற்சியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விமல், தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கத்தில் இருந்த அவரை நண்பர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விடுதி கட்டணம் செலுத்த முடியாததே பயிற்சி மாணவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.