முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநில அரசுக்கு என தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்து கொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மருத்துவ கல்வியியல் மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதை கண்டித்து மார்ச் 9 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய டாக்டர் ரவீந்திரநாத்,
”முதுநிலை மருத்துவ படிப்புகளில் குடியிருப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 14 பிரிவை மீறுவதாகும். அவ்வாறு மருத்துவ இடங்களை வாழ்வின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காது அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும் மேற்படிப்பு இடங்களையும் அகில இந்திய பொதுவானதாக்க வேண்டும் என்பதை போன்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உள்ளது.
இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரானது. இதனை திரும்ப பெற வேண்டும் என்பதை கண்டித்து வருகின்ற 9ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.