தமிழ்நாடு

பரபரப்பை ஏற்படுத்திய சிஎம்சி மருத்துவ கல்லூரியில் ரேகிங் வீடியோ! மாணவர்கள் மீது நடவடிக்கை

webteam

சிஎம்சி (CMC) மருத்துவக் கல்லூரியில் ரேகிங் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாவணவர்கள், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை அரை நிர்வாணம் படுத்தி, கல்லூரி வளாகத்தை சுற்றி வர செய்து ரேகிங் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 7 மாணவர்ளின் பெயரை குறிப்பிட்டு கல்லூரி நிர்வாகத்திற்கு வந்த முகவரி அற்ற புகாரின் அடிப்படையில் முதல்கட்டமாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று பாகாயம் காவல் நிலையத்தில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.சாலமன் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார். அதில் தங்கள் கல்லூரியில் நடைபெற்ற ரேகிங் தொர்பாக விசாரித்து, சட்டவிரோதமாக ரேகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் பாகாம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரியில் அமைக்கப்பட்ட மூத்த பேராசிரியர் தலைமையிலான சிறப்பு கமிட்டியும், ரேகிங் தடுப்பு கமிட்டியும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ராகின் தொடர்பாக சென்னை எம்ஜிஆர் மருத்துவர் பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.