தமிழகத்தில் இந்த ஆண்டு தட்டம்மை நோய் வரவாய்ப்பிலை என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், விடுபட்டுப்போன குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு தட்டம்மை நோய் வரவாய்ப்பிலை என்றும் அவர் தெரிவித்தார்.