தமிழ்நாடு

நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது - வைகோ

நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது - வைகோ

rajakannan

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, அக்கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவருக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை கணணன் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “CAA சட்டத்திற்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இந்த விளைவுகளை பா.ஜ.க நினைக்கவில்லை.

 நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது. அதை பயன்படுத்தி இருக்க கூடாது. ஆனால் அந்த நோக்கத்தில் பேசியிருக்க மாட்டார்” என்று கூறினார்.