தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க மதிமுக முடிவு: வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க மதிமுக முடிவு: வைகோ

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க மதிமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மது ஒழிப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் பேரணி நடத்த இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.