துரை வைகோ pt
தமிழ்நாடு

மதிமுக கூட்டம் |துரை வைகோ விலகல் கடிதம்.. நிர்வாகிகள் வலியுறுத்தல்!

”துரை வைகோ விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது” என மதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Prakash J

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், முதன்மைச் செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும், அவருடைய விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து, துரை வைகோவின் ராஜினாமவை கட்சித் தலைமை ஏற்காத நிலையில், முதன்மைச் செயலாளர் என்றே அவர் பெயர் உள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துரை வைகோ

முன்னதாக, நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த துரை வைகோ, “என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ராஜினாமா குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். காரணம் குறித்து அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கிறேன். என்னால் கட்சிக்குள் எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள், எதனால் பிரச்னை வந்தது என்பது நிர்வாகக்குழு கூட்டத்திற்குப்பின் தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.