செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் இன்று அதிகாலை முதல் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை, பழைய வழக்கு ஒன்றின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் மேலும் முழுமையான தகவல்கள் முழு சோதனை முடிந்த பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.