மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கந்தமங்கலம் பகுதியை சோந்தவர் மகாராஜா(30). விவசாய தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு மகாராஜா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையறிந்த மகாராஜா அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதையடுத்து உறவினர்கள் சிறுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மகாராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.