நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்றிரவு நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் வாகனங்களை ஓட்டி வந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை பூக்கடைத்தெருவைச் சேர்ந்த கார்த்தி(28), என்பவரும், மயிலாடுதுறை அருகே குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(28) என்பவரும், மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் எதிரெதிரே இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருச்சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்தி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த ரமேஷ், கார்த்தி ஆகியோரின் உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய மயிலாடுதுறை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.