போலீசார் விசாரணை  pt desk
தமிழ்நாடு

மயிலாடுதுறை: வீட்டு ஜன்னலை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

தரங்கம்பாடி அருகே வீட்டு ஜன்னலை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆயப்பாடி கிராமம் பெரிய தெருவில் வசித்து வருபவர் சமீரா பர்வீன். இவரது கணவர் அப்துல் லத்தீப் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சமீரா பர்வீன் திருமண நிகழ்விற்காக கடந்த 31ஆம் தேதி கும்பகோணம் சென்றுள்ளார்.

15 பவுன் நகைகள் கொள்ளை

தொடர்ந்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டு அறைகளில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு 15 பவுன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பொறையார் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.