தமிழ்நாடு

மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நீடிக்கிறது மழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நீடிக்கிறது மழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Veeramani

மழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேர்வுகள் நடைபெறும் வகுப்புகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர்கள் விளக்கமளித்துள்ளனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியிருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும்12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளிகளில் தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.