தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

webteam

ஆந்திர மாநிலத்தின் கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரை ஜூன் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான தேதிகளில், தமிழகத்தை பொறுத்தவரை இயல்பான மழை அளவு 62 மி.மீ. ஆகும். ஆனால் 56 மி.மீட்டர் அளவு மழை மட்டுமே பெய்துள்ளது.

ஆந்திர மாநிலம் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொருத்த வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.