தமிழ்நாடு

ஆட்கடத்தல் சம்பவங்கள்: தென்னிந்தியாவில் முதலிடம் வகிக்கும் தமிழகம்

ஆட்கடத்தல் சம்பவங்கள்: தென்னிந்தியாவில் முதலிடம் வகிக்கும் தமிழகம்

webteam

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவிலான ஆட்கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவித்துள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் 8,132 ஆட்கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 3,576 ஆட்கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக ராஜஸ்தானில் 1,422 ஆட்கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 434 ஆட்கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 404 சம்பவங்களும் , ஆந்திராவில் 239 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதே வேளையில் கேரளாவில் 21 ஆட்கடத்தல் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.