தமிழ்நாடு

ஊரடங்கில் நடந்த திருமணம் : ஃபேஸ்புக், யூடியூப்பில் வாழ்த்திய உறவினர்கள்

ஊரடங்கில் நடந்த திருமணம் : ஃபேஸ்புக், யூடியூப்பில் வாழ்த்திய உறவினர்கள்

webteam

கோவையில் நடைபெற்ற திருமணத்தில் ஃபேஸ்புக் லைவ் மூலம் இணைந்த உறவினர்கள் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

கோவையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கு முழு முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கிடையில் துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாபு - பிரவீணா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.

காதலியை கரம் பிடிப்பதை உறவினர்களும் வாழ்த்த வேண்டும் என்பதற்காக, ஃபேஸ்புக் மற்றும் யூ டியூப் மூலம் திருமணத்தை நேரலை செய்ய விக்னேஷ் பாபு ஏற்பாடு செய்திருந்தார். இதுகுறித்து உறவினர்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்ததால், அவரவர் வீட்டிலிருந்தபடியே ஃபேஸ்புக் லைவ் மூலம் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், 2 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தோடு இணைந்து ஆதரவற்றோருக்கு வழங்கி நெகிழ்ந்தனர் இந்தப் புதுமணத் தம்பதியினர்.