கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக்கடலில் இலங்கை பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் பலத்தக் காற்றும் வீசி வருகிறது. இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் மீனவர்கள் 9-வது நாளாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த 9 நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்