தமிழ்நாடு

முழுமையாக முடிவுக்கு வந்தது மெரினா போராட்டம்

முழுமையாக முடிவுக்கு வந்தது மெரினா போராட்டம்

Rasus

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டபின், அதனை ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் அங்கிருந்து கலைந்தனர். ஆனால் ஒரு பிரிவினர் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மெரினாவில் இருந்த அவர்கள், நேற்று மாலை கலைந்து சென்றனர். இதனால் மெரினா கடற்கரையில் ஒரு வாரமாக நீடித்த போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.