சேலம் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில், மார்ச் 5ம் தேதி மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். சிபிசிஐடி விசாரணை நடத்திய இந்த வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், 116 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர்.
வழக்கின் விசாரணை முழுவதும் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.