உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.
உலக இதய தினத்தை முன்னிட்டு பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமாக பங்கேற்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் போட்டி துறையூர் சாலை அம்மாபாளையம் வரை நடைபெற்றது. இதில் திருச்சி,நாமக்கல்,கோவை,திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.