தேர்வு கட்டண உயர்வை எதிர்ப்பு கண்டித்து மாணவர்கள் பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேர்வு கட்டண உயர்வை கண்டித்து 2வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தேர்வு கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை எளிய மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.