திருச்சி சமயபுரம் கோவிலில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பித்திருந்த ஒப்பந்ததாரரிடம் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கமிஷன் கேட்ட ஆடியோ வெளியாகியுள்ளது.
திருச்சி சமயபுரம் கோவிலில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்ட நிலையில், மணிகண்டன் என்ற ஒப்பந்ததாரர் டெண்டர் கோரியுள்ளார். இந்நிலையில் மணிகண்டனை சந்தித்த கோவில் செயல் அலுவலர் குமரதுரை, எம்.எல்.ஏ. பரமேஸ்வரி சொன்னால்தான் பணி வழங்க முடியும் என்றும், அவரை பார்த்துவிட்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே ஒப்பந்ததாரர் மணிகண்டனிடம் தொலைபேசியில் பேசிய எம்.எல்.ஏ. பரமேஸ்வரி, தனக்காக கமிஷனை தர வேண்டும் என்றும், தொகுதி எம்.எல்.ஏ. என்பதால் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளார். அந்த தொலைபேசி ஆடியோ உரையாடல் வெளிவந்துள்ளது.