தமிழ்நாடு

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் உயிரிழப்பு

Rasus

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், மாஞ்சா நூல் அறுத்ததில் உயிரிழந்தார்.

‌கொளத்தூரை சேர்ந்த சிவபிரகாசம் தனது தந்தை சந்திரசேகருடன், சேலையூரில் இருந்து கொளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸில் அனகாபூத்தூர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே பறந்த மாஞ்சா கயிறு அவரது கழுத்தை அறுத்தது. இதில் சிவபிரகாசம் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தந்தை காயங்களுடன் உயிர் தப்பினார்.

சென்னையில் மாஞ்சா நூல் விற்பனைக்கு தடை விதிக்கப்ப்டட நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஞ்சா கயிறு மூலம் காற்றாடி பறக்கவிட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.