தமிழ்நாடு

வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு

வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு

webteam

தீரன் சின்னமலையின் படைத்தளபதி வீரன் பொல்லாலனுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி நாமக்கல்லில் நடந்த அருந்ததியர் ஆதரவு மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலையின் படைத்தளபதி வீரன் பொல்லாலனுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு, வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.