காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர் Pt web
தமிழ்நாடு

காங்கிரஸின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்.. மாணிக்கம் தாகூரின் அரசியல் பயணம்!

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

PT WEB

1994ஆம் ஆண்டு மாணவர் காங்கிரஸ் உறுப்பினராக அரசியல் பயணத்தை தொடங்கினார் மாணிக்கம் தாகூர். 1995இல் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் மாவட்ட பொதுச் செயலராகவும், 1996ஆம் ஆண்டு அதே அமைப்பின் தேசிய பொதுச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலராகவும், 1998இல் அந்த அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மாணிக்கம் தாகூர்

2002 முதல் 2005 வரை இளைஞர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலராகவும், 2006இல் காங்கிரஸ் மத்திய தேர்தல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். 2008ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸின் தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். 2014இல் மேற்கு வங்கம், பிஹார், அஸாம் மாநிலங்களின் மக்களவை தேர்தல் காங்கிரஸ் தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2017 முதல் 2020 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் மற்றும் கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2019ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மேலும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவாகவும் பணியாற்றினார். 2020 முதல் 2023 வரை தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். 2024ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக 3ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்