திமுக-காங்கிரஸ் உறவு முறிவுக்கு பின், திமுக இளைஞரணி ராகுல் காந்தி, காங்கிரஸுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர், திமுக பாஜக உடன் backdoor politics நடத்தி, விஜய் முதல்வராக வருவதை தடுக்க முயன்ற திட்டம் தோல்வியடைந்ததால் இப்போது நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டுகிறார். திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்பே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே மோதல் போக்கு இருந்தது. காங்கிரஸ் தரப்பினர் அதிகாரத்தில் பங்குகேட்ட நிலையில், அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் கடைசிவரை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெறுமா அல்லது தவெக உடன் கூட்டணிக்கு செல்லுமா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் தலையிட, திமுக-காங்கிரஸ் உடனான மோதல் முடிவுக்கு வந்து கூட்டணி உறுதியானது.
சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றாக சேர்ந்து களம்கண்டாலும், தேர்தல் முடிவுக்கு பிறகு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. மேலும் தவெகவின் அமைச்சரவையிலும் 59 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்றது.
இந்தசூழலில் தான் காங்கிரஸ் திமுகவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாக திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது ஒருபடி மேலே போய் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராகவும், ராகுல் காந்திக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதோடு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் திமுகவினரின் இந்தசெயலுக்கு திமுகவை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மாணிக்கம் தாகூர், “ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது.
Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support.
இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம்.
Cry cry cry 😭
Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க.
IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார்.
VCK leader கூட expose பண்ணிட்டார்.
CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார்.
எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க” என விமர்சித்துள்ளார்.
அதேபோல தமிழ்நாடு காங்கிரஸும் திமுகவின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.