கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கடந்த 7-ம்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து தப்பி ஓடிய இளைஞரை திருவல்லிக்கேணி போலீசார் தேடி வருகின்றனர். தப்பி ஓடிய இளைஞர் மருத்துவமனையில் உண்மையான வீட்டு முகவரியைக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.