குடிபோதையில் தேனி - கொல்லம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் படுத்து தூங்கிய நபரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில், குமுளி தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் அந்த நபர் படுத்து கிடந்தார். அந்த பகுதியில் உள்ள சாலை வளைவாக இருந்ததால் அருகில் வந்த பிறகே அவர் சாலையில் படுத்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் கடைசி நேரத்தில் சுதாரித்து சென்றனர். அந்த நபரை எழுப்ப முயன்றவர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை யாரும் எழுப்ப முயலவில்லை. பின்னர் அந்த நபர் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு சாலையிலிருந்து எழுந்துச் சென்றார்.