தமிழ்நாடு

காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற நபர் - சுட்டுப் பிடித்த போலீசார்..!

காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற நபர் - சுட்டுப் பிடித்த போலீசார்..!

webteam

திருவள்ளூரில் காவலரை தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில் நேற்று மாலை ஆகாஷ் என்பவர் தமது நண்பர்கள் 5 பேருடன் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இருசக்கர வாகனம் ஒன்றை தீயிட்டு கொளுத்திய அந்தக் கும்பல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த 6 பேரையும் திருவள்ளூர் டவுன் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே அந்தக் கும்பல் மப்பேடு அருகே மேட்டுகண்டிகை என்ற பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, காவலர் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு ஒருவர் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஆகாஷுக்கு காலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஆகாஷை மீட்ட போலீசார், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தப்பி ஓடிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் திருவள்ளூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.