தமிழ்நாடு

விளம்பர கம்பம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விளம்பர கம்பம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

webteam

புதுக்கோட்டை அருகே விளம்பர கம்பம் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தவர் மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(50). இவர் இன்று அதிகாலையில் வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மார்க்கெட் அருகில் இருந்த விளம்பர பலகையின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். 

தகவலறிந்து வந்த போலீசார் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கருப்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் மற்ற விளம்பர கம்பிகளில் மின் கசிவு  இருக்கிறதா என்று  மின்சார வாரிய ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர்.