தமிழ்நாடு

செயல்படாத ஏர்செல் நெட்வொர்க்கால் உயிரிழந்த முதியவர்..!

செயல்படாத ஏர்செல் நெட்வொர்க்கால் உயிரிழந்த முதியவர்..!

Rasus

ஏர்செல் நெட்வொர்க் வேலை செய்யாததால் நாமக்கல் மாவட்டம் தேவணாங்குறிச்சி அருகே விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏர்செல் நெட்வொர்க் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஏர்செல் நெட்வொர்க் வேலை செய்யாததால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தேவணாங்குறிச்சி அருகே 70 வயதுடைய முதியவரான ராமசாமி கடைக்குச் செல்லும்போது பால் வண்டியில் அடிப்பட்டு கீழே விழுந்திருக்கிறார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏர்செல் எண் மூலம் 108 ஆம்புலன்சை மக்கள் பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்காதத‌ால் வேறொரு நெட்வொர்க் மூலம் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அதற்குள் ஒரு மணி நேரம் கடந்ததால், ரத்தம் வீணாகி அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.