தமிழ்நாடு

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

webteam

திண்டிவனம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டிவனம் அடுத்த இரட்டணையைச் சேர்ந்தவர் செல்வம். பெயிண்டரான இவருக்கு சுதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதைத்தொடர்ந்து செல்வம் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், சின்னதுரை ஆகியோருடன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் செல்வம் வீடு திரும்பாததால் உறவினர்கள் செல்வத்துடன் சென்றவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. 

இதனால் சந்தேகமடைந்த செல்வத்தின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் செல்வம் அணிந்திருந்த துணி மற்றும் செருப்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. செல்வத்துடன் குளிக்க சென்ற அருண்குமாருக்கும் செல்வத்திற்கும் முன்விரோதம் இருந்தததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் தீயனைப்பு வீரர்கள் ஆற்றில் செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு இன்று செல்வத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.