தமிழ்நாடு

நாயை கண்மூடித்தனமாக தாக்கும் நபர்: ஆன்லைன் வழியாக போலீசில் புகார்

நாயை கண்மூடித்தனமாக தாக்கும் நபர்: ஆன்லைன் வழியாக போலீசில் புகார்

Rasus

நாய் ஒன்றை அடையாளம் தெரியாத ஒருவர் கொடூரமாக தாக்கியது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், நாய் ஒன்றை அடையாளம் தெரியாத ஒருவர் கம்பால் கடுமையாக தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி அஷ்வத் என்ற கல்லூரி மாணவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில், ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

நாயை கொடூரமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, புதிதாக நடந்த சம்பவமாகவே தோன்றுவதாகவும் எனவே, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோவில் கொங்கு மண்டல தமிழில் உரையாடல் இருப்பதால் மேற்கு மாவட்டம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.