கீரித்தலையன் என்ற தன் பெயரை பற்றி கிண்டல் செய்ததால், கொத்தனார் ஒருவர் தன்னுடன் வேலை செய்யும் மற்றொருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே நகர் பகுதியில் பிளாட்பார்மில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருபவர்கள் ராபர்ட் மற்றும் கீரிதலையன்.
இருவரும் நேற்றிரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கீரித்தலையன் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ராபர்டை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கீரிதலையனை நேற்று நள்ளிரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்கலாமே: நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை
விசாரணையில் ராபர்ட் தகாத வார்த்தையால் பேசியதாகவும், தன்னுடைய பெயரை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கீரித்தலையன் வாக்குமூலம் அளித்துள்ளார்.