தமிழ்நாடு

மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்: கோயம்பேட்டில் பரபரப்பு

மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்: கோயம்பேட்டில் பரபரப்பு

kaleelrahman

சென்னையில் மனைவி இறந்த துக்கம் தாங்கமல் மனவேதனையில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் திடீரென ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்தார். இந்த தகவல்  கோயம்பேடு பேருந்து நிறுத்த போலீசாருக்கு கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கீழே இறங்க மறுத்ததால் கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலமாக மின் கம்பத்தில் ஏறினர். தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாதுர்யமாக மீட்டு கீழே இறக்கினர்.

மதுபோதையில் இருந்த அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் ஆபிரஹாம் (43) என்றும். அவர் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.