குடிபோதையில் வனத்துறை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை, ஆலாந்துறை அடுத்த இருட்டுப்பள்ளத்தை சேர்ந்தவர் நடராஜ் ( வயது 55). இவர், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். சாடிவயல் வனத்துறை செக்போஸ்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, மாலை, 5:30 மணியளவில் கல்கொத்திபதி மலை கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் ( 22) என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.
கோவை குற்றால வனப்பகுதிக்குள் செல்ல முற்பட்ட அவரை, தடுத்த காரணத்தால் வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நடராஜை கத்தியால் குத்தியுள்ளார் நந்தகுமார் . அதில் பலத்த காயமடைந்த நடராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காருண்யா நகர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்துள்ளனர்