தமிழ்நாடு

ஏடிஎம் சாவியை வைத்துவிட்டு சென்ற ஊழியர்கள்.. அலாரம் ஒலித்ததால் பயந்து ஓடிய திருடன்..!

ஏடிஎம் சாவியை வைத்துவிட்டு சென்ற ஊழியர்கள்.. அலாரம் ஒலித்ததால் பயந்து ஓடிய திருடன்..!

webteam

திண்டிவனம் அருகே ஏ.டி.எம்மில் பணம் திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு ஊழியர்கள் சாவியை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.

நேற்று காலை 10 மணியளவில் ஏடிஎம் மையத்திற்கு வந்த நபர் ஒருவர் சாவியை பார்த்தவுடன் அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்திற்கு வந்த அந்த நபர், ஏடிஎம்-ஐ திறக்க முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்த அலாரம் ஒலிக்கவே அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் திண்டிவனத்தை சேர்ந்த சுகுந்தன்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுகுந்தனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.