தமிழ்நாடு

மனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய கணவர் கைது

மனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய கணவர் கைது

webteam

சென்னை அருகே உடைந்த பீர் பாட்டிலால் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி காமாட்சிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்று வெளியே வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் குமரன் பராமரிப்பில் இருக்கும் தனது 3 பிள்ளைகளை காமாட்சி சந்திக்க சென்றுள்ளார். இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த குமரன், காமாட்சியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து காமாட்சியை கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.