தமிழ்நாடு

சென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது

சென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது

webteam

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் காரில் கடத்திச்செல்லப்பட்ட நபர், மீஞ்சூரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிந்தாதிரிப்பேட்டை குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் நேற்று அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிலர் இவரை காரில் கடத்திச் சென்றனர். கணவர் கடத்தப்பட்டதாக அவரது மனைவி அமுதா அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அமுதாவின் உறவினரான திருவொற்றியூரைச் சேர்ந்த யூசுப் என்பவர் தான் கதிரவனை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் தொடர்பாக 3 தனிப்படை அமைத்து விசாரித்து வந்த காவல்துறையினர், நேற்று இரவு யூசுப்பின் நண்பர் சுரேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர். கூலிப்படையை வைத்து கதிரவன் கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மதுரவாயல் பகுதியில் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தப்பட்ட யூசுப்பின் உடல் மீஞ்சூர்
அருகே ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. அவரை யூசுப் உள்ளிட்ட 5பேர் அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை, தாம்பரம் அருகே யூசுப் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.