திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த ஆணின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.
லால்குடி பெண்கள் பள்ளி அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் லால்குடி காவல்துறைக்கும், அரியலூர் ரயில்வே போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால், 10 மணி நேரமாகியும் சடலத்தை மீட்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சடலம் அப்படியே ரயில் தண்டவாளத்தில் பல மணி நேரமாக கிடந்ததால் அந்த வழியாக போகும் பள்ளி மாணவிகள், பெண்கள் அச்சமடைந்தனர். காவல்துறையினர் உடலை உடனே மீட்காமல் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து அரியலூர் ரயில்வே காவல்துறையினரிடம் கேட்டபோது காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் திருச்சி காவல்துறைதான் சடலத்தை மீட்க வேண்டும் என கூறினர். இதேபோல் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு லால்குடி அருகே வழுதியூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிப்பட்டு இறந்தபோது இதே நிலைமைதான் இருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.