தமிழ்நாடு

விலகிச் செல்லும் மஹா புயல்: தமிழகத்தில் மழை குறையும்

விலகிச் செல்லும் மஹா புயல்: தமிழகத்தில் மழை குறையும்

jagadeesh

மஹா புயல் விலகிச் செல்வதால் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிர புயல் மஹா, மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்துச் செல்கிறது. இந்த புயலானது மங்களூருவிலிருந்து 390 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது. 

இதனால் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹா புயல் விலகிச் செல்வதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்ப‌குதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வரும் நவம்பர் 3ஆம் தேதி வடக்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.