தமிழ்நாடு

நீ நடந்தால் நடை அழகு: ராகுலுக்காக நக்மா பாடிய பாடல்

நீ நடந்தால் நடை அழகு: ராகுலுக்காக நக்மா பாடிய பாடல்

webteam

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படப்பாடலைப் பாடி, இது ரஜினிக்காக அல்ல ராகுலுக்கான பாடல் என மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கூறியுள்ளார்.

புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தில் மகளிர் காங்கிரசாருக்கு நடந்த பயிற்சி முகாமில் பேசிய நக்மா, அடுத்து பிரதமராக வரக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்றும், அதற்கு காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் வரும், "நீ நடந்தால் நடை அழகு" மற்றும் "ஸ்டைலு...ஸ்டைலு தான்" என்ற பாடல்களை நக்மா பாடினார். நக்மா இந்தப்பாடலை பாடியதை  அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது பேசிய நக்மா இந்தப் பாடல் ரஜினிக்கு அல்ல, ராகுல் காந்திக்கு என நக்மா கூறினார்.