இளைஞர்கள் பற்றி கமல் ஆதங்கப்பட வேண்டாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என்றார். அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது என்ற அவர், கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இளைஞர்கள் பற்றி கமல் ஆதங்கப்பட வேண்டாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், “இளைஞர்கள் அதிமுக பாசறைகளில் இணைந்து வருகின்றனர். கமல் கட்சிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதற்காக மற்றவர்கள் ஏதும் செய்யமுடியாது. இளைஞர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நன்றாக உள்ளனர். நினைக்கும்போது அரசியலுக்கு வருவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.