தமிழ்நாடு

தடுத்தது போலீஸ்.. திரும்பினார் மாஃபா பாண்டியராஜன்

தடுத்தது போலீஸ்.. திரும்பினார் மாஃபா பாண்டியராஜன்

Rasus

கூவத்தூர் செல்லும் வழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீண்டும் சென்னை திரும்பினார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியான கோவளத்தில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கூவத்தூர் செல்லாமல் மீண்டும் சென்னைக்கே மாஃபா பாண்டியராஜன் திரும்பியுள்ளார். இதனிடையே, கூவத்தூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.