தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வோம்: மாஃபா பாண்டியராஜன்

சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வோம்: மாஃபா பாண்டியராஜன்

webteam

சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு வார காலமாக நிலவி வந்த அசாதாரண சூழல் முடிவுக்கு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வென்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் நியாயம் கேட்க உள்ளதாக கூறினார். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.