தமிழ்நாடு

டிடிவி தினகரன், மதுசூதனனுக்கு எவ்வளவு சொத்து?

டிடிவி தினகரன், மதுசூதனனுக்கு எவ்வளவு சொத்து?

Rasus

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான டி.டி.வி. தினகரன், மதுசூதனன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் சொத்து உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.இ‌.அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரனின் பிரமாணப் பத்திரத்தில், தன‌க்கு 11 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் ‌இருப்பதாக, தினகரன் கூறியுள்ளார். மனைவி பெயரில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் இருப்பதாகவும், தன் மீது பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி ‌அம்மா அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தனது பிரமாணப் பத்திரத்தில், 18‌ லட்சத்து 89 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 51 லட்சத்து 72 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் ம‌திப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.