தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டும் மதுராந்தகம் ஏரி

முழு கொள்ளளவை எட்டும் மதுராந்தகம் ஏரி

webteam

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரி நிரம்ப மீதம் 1 அடி மட்டுமே உள்ளது. 

வடகிழங்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவு ஆன 23.3 அடியில் இருந்து, தற்போது 22. 3 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. மேலும் எப்போது வேண்டுமானலும் ஏரி நிரம்ப வாய்ப்பு உள்ளதால் 21 மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும், ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.