தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது

Rasus

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியுள்ளது.

மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.5 அடியை எட்டியுள்ள நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து 9,800 கன அடியாகவுள்ளது. அதில் 8,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக நடப்பாண்டில் மட்டும் மதுராந்தகம் ஏரி 2-வது முறையாக நிரம்பியுள்ளது. கிளியாறு மற்றும் நெல்வாய் மதகு வழியாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து‌ அதிகரித்தாலும் தாழ்வான பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு தற்போது வரை வெள்ள அபாய எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.